Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகை நீக்கம்: பாஜக மாநில தலைவர் அண்ணமலையின் அறிக்கை!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (12:40 IST)
பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஆறுமாதக் நீக்கப்படுகிறார்
 
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்
 
கடந்த சில நாட்களாக நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருச்சி சூர்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் காயத்ரி ரகுராம் வலியுறுத்தியதால் அண்ணாமலை இந்த நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments