Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை முதல் வாரம் DMK Files பாகம் 2 வெளியாகும்: அண்ணாமலை அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (13:00 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை DMK Files முதல் பாகத்தை வெளியிட்ட நிலையில் ஜூலை முதல் வாரத்தில் இரண்டாவது பாகம் வெளியாகும் இன்றைய அறிவித்துள்ளார். 
 
இன்று செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை, டிஆர்  குறித்து மேலும் சில விவரங்களை தெரிவிக்க இருப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி பிடிஆர் ஆடியோவின் முழு வடிவம் தன்னிடம் இருப்பதாகவும் ஆனால் அதை வெளியிட்டால் பிடிஆர் தான் பகடைக்காயாக பயன்படுத்தப்படுவார் என்பதால் தான் வெளியிடவில்லை என்றும் ஒருவேளை பிடிஆர் ஆடியோ குறித்த வழக்கு என் மீது தொடுக்கப்பட்டால் அந்த முழு ஆடியோவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் DMKI Files இரண்டாம் பாகம் ஜூலை முதல் வாரம் வெளியாகும் என்றும் முதல் பாகத்தில் 12 நபர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டது போல் இரண்டாம் பாகத்தில் 21 நபர்களின் சொத்து பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  அதனை அடுத்து DMK Files மூன்றாம் பாகமும் வெளியிட உள்ளேன் என்றும் அண்ணாமலை கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments