Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி பற்றி பேச கனிமொழிக்கு தகுதி கிடையாது: அண்ணாமலை ஆவேசம்

Siva
வெள்ளி, 8 மார்ச் 2024 (16:12 IST)
திமுக எம்பி கனிமொழிக்கு பிரதமர் குறித்து பேச எந்தவித தகுதியும் இல்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இடம் பிரதமர் குறித்து திமுக எம்பி கனிமொழி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய அண்ணாமலை ’கனிமொழி தனது தந்தை கட்டிய வீட்டில் தான் தங்கியிருக்கிறார், அவர் ஏதாவது உழைத்து சம்பாதித்துள்ளாரா? சொந்தமாக காடு மேட்டில் வேலை செய்து விவசாயம் செய்து இதுவரை சம்பாதித்து உள்ளாரா? இல்லை..

 கருணாநிதி மகள் என்ற பெயரில் ஓசியில் தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், கனிமொழிக்கு பிரதமரை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை, அப்பா பெயரை வைத்து வாழ்ந்து வரும் கனிமொழி, பிரதமர் பற்றி விமர்சனம் செய்ய தகுதி இல்லாதவர், கருணாநிதி என்ற வார்த்தையை தூக்கி விட்டால் கனிமொழி யார்? அவர் இது போன்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்

முன்னதாக கனிமொழி மதத்தை வைத்து பிளவு படுத்தி மத்திய அரசு மக்களை பிரிக்க முயற்சிக்கிறது என்றும் மணிபூருக்கு பிரதமர் மோடி செல்லவில்லை என்றும் ஆனால் தமிழகத்திற்கு மட்டும் தேர்தல் காரணமாக அடிக்கடி வருகிறார் என்றும் கூறியிருந்தார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

பொன்முடியால் திமுக ஆட்சியை இழக்கலாம்.. உளவுத்துறை அறிக்கை கொடுத்ததா?

ஒரு திருடன் நல்லவனாக மாறிவிட்டால் மன்னிக்க மாட்டோமா.. பாஜக கூட்டணி குறித்து பொன்னையன்..!

திடீரென கண் திறந்த அம்மன் சிலை.. திசையன்விளை கோவிலில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments