Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னுமா முதலமைச்சருக்கு புரியவில்லை: நீட் தேர்வு குறித்து அண்ணாமலை!

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (07:39 IST)
நீட் தேர்வு தான் உண்மையான சமூக நீதிக்கான அடையாளம் என்பதை முதலமைச்சருக்கு இன்னும் புரியவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நீட் விவகாரம் குறித்து இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுவதற்கு நன்றி என்று கூறி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ள அண்ணாமலை, நாளை அனைத்து கட்சி கூட்டம் என்பது கண்துடைப்பு என்பதை புரிந்து கொண்டு விலகிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 
 
நீட்தேர்வு தான் உண்மையான சமூக நீதிக்கான அடையாளம் என்பதை முதல்வர் இன்னும் உணரவில்லையா? என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, மக்கள் நலனுக்காக முழு ஒத்துழைப்பு கொடுக்க பாஜக தயாராக உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் உண்மையும் நேர்மையும் இருக்க வேண்டும் என்றும் மக்களை ஏமாற்றும் பிரச்சனைகளுக்கு துணை நிற்க மாட்டோம் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

கரையைக் கடந்த போதும் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் ஃபெஞ்சல் புயல்… வானிலை மையம் தகவல்!

2900 மோட்டார்கள் பொருத்தி வெள்ளத்தை வடிக்கும் பணிகள்… அமைச்சர் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments