அண்ணா பல்கலை மாணவி வழக்கு: திடீரென விலகிய சைபர் கிரைம் டி.எஸ்.பி..!

Siva
வியாழன், 30 ஜனவரி 2025 (15:44 IST)
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்து வந்த சைபர் கிரைம் டிஎஸ்பி ராகவேந்திரா கே ரவி என்பவர் திடீரென சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திமுக அனுதாபியான ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு குறித்து சென்னை ஐகோர்ட் பல உத்தரவுகளை பிறப்பித்தது என்பதும் இதையடுத்து சென்னை அண்ணாநகர் துணை ஆணையர், ஆவடி துணை ஆணையர் மற்றும் சேலம் துணை ஆணையர் கொண்ட உள்பட சிலர் கொண்ட குழு  அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் சைபர் க்ரைம் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி இடம்பெற்று இருந்த நிலையில் தற்போது அவர் இந்த குழுவில் இருந்து திடீரென விலகி உள்ளார். தன்னை சரியாக பணி செய்ய விடாமல் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் நடந்து கொள்வதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக அவர் டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. டிஎஸ்பி யின் இந்த விலகல் முடிவு காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்