Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட காலமாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (12:00 IST)
நீண்ட காலமாக அரியர் வைத்திருக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 கடந்த 2001 - 2002 ஆம் கல்வி ஆண்டில் இருந்து பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து தங்கள் அரியரை முடித்துக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

வரும் நவம்பர், டிசம்பர் மற்றும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் இரண்டு கட்டங்களாக இந்த சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த சிறப்பு தேர்வில் 2001 0 2002 ஆம் கல்வியாண்டில் அரியர் வைத்திருப்பவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் என்றும் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர், டிசம்பர் மாதம் சிறப்பு தேர்வு எழுத விரும்புபவர்கள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலை 11:00 மணி முதல் செப்டம்பர் 18ஆம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என்றும் விண்ணப்ப கட்டணம் 5000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரியர் வைத்துள்ள ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.225 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் இது குறித்த முழு விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments