Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் நிகழ்ச்சியில் பங்கேற்றால் தான் வருகைப்பதிவு.. அண்ணா பல்கலை சுற்றறிக்கை?

Mahendran
செவ்வாய், 23 ஜனவரி 2024 (12:56 IST)
சென்னை அண்ணா பல்கலையில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், கலந்துகொண்டால் தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அண்ணா பல்கலை. வளாகத்தில் நடைபெறும் நேதாஜி பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். ஆளுநரின் இந்த நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை. கிண்டி வளாகத்தில் உள்ள ECE, CSE, IT துறை மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை வெளியானதாக கூறப்படுகிறது,.
 
மாணவர்களின் வருகைப்பதிவை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் பதிவு செய்ய வேண்டும் எனவும் துறை தலைவர்களுக்கு கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
 
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சென்னை அண்ணா பல்கலை சுற்றறிக்கைக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுடையது.. குறுக்க யார் இந்த சிக்கந்தர்? - எச்.ராஜா கேள்வி!

ஒரே நாளில் தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. இன்று மட்டும் 680 ரூபாய் குறைவு..!

டிரம்ப் எதிராக வழக்கு தொடர்வோம்.. வரி உயர்வு குறித்து சீனா எச்சரிக்கை..!

பணத்தாசை காட்டி மயக்கி 30 பெண்களோடு உல்லாசம்! வீடியோ எடுத்து ஷேர் செய்த மெடிக்கல் உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments