Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிஞர் அண்ணா 116வது பிறந்த நாள்! திமுக வெளியிட்ட முக்கிய அறிக்கை..!

Mahendran
சனி, 14 செப்டம்பர் 2024 (14:38 IST)
பேரறிஞர் அண்ணா 116வது பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் என சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 116வது ஆண்டு பிறந்த நாளான 15.9.2024 அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
 
கழக மாநில அமைச்சர் பெருமக்கள், முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல்தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி நகரில் மெட்ரோ பணியின் போது விபரீதம்.. வீட்டின் தரை பகுதி மண்ணில் புதைந்ததால் பரபரப்பு..!

திமுகவும், நக்சல்களும் சேர்ந்து எடுத்த பயங்கரவாத படம் ‘விடுதலை 2’?? - அர்ஜுன் சம்பந்த் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஒரு வார மோசமான சரிவுக்கு பின் ஏற்றத்தை நோக்கி பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு விநியோகம் எப்போது? கூடுதல் தலைமை செயலாளர்

கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments