Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி! - மத்திய அரசு புதிய மசோதா

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (14:48 IST)
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய சட்டம் ஒன்றை மத்திய அமைச்சரவை சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
 

 
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், மனித உயிரிழப்பும், காயங்களும் ஏற்படுவதாகவும் கூறி அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.
 
இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. எனினும், தமிழக அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்து ஜல் லிக்கட்டு நடைபெற அனுமதி பெற்றது. அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
 
விலங்குகள் நல அமைப்பு மீண்டும் தொடர்ந்த பொதுநல வழக்கால் 2014-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடை பெறவில்லை.
 
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஜல்லிக்கட்டு இந்திய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும் என ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய சட்டம் ஒன்றை மத்திய அமைச்சரவை சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது.
 
தற்போது இந்தப் பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது மழைக் கால கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்த புதிய மசோதாவை அறிமுக செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரம்.. பறிபோன பதவி மீண்டும் கிடைத்தது..!

இனி எழும்பூரில் இருந்து இந்த 2 ரயில்கள் புறப்படாது.. தாம்பரம் தான்..!

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments