Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புசெழியன் மேனேஜர் கைது: அன்புச்செழியனையும் நெருங்கியது போலீஸ்

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (15:35 IST)
சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் அன்புச்செழியன் விரைவில் பிடிபடுவார் என போலீஸ் வட்டாரங்கள் கூறிவரும் நிலையில் சற்றுமுன்னர் அன்புச்செழியனின் மேனேஜர் முருகன் என்பவரை சென்னை வடபழனியில் போலீசார் கைது செய்தனர்.
 
மேனேஜர் முருகனிடம் செய்த விசாரணையின் அடிப்படையில் அன்புச்செழியன் இருக்குமிடம் குறித்த துப்பு துலங்கியுள்ளதாகவும், மிகவிரைவில் அன்புச்செழியன் பிடிபடுவார் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் அன்புச்செழியன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் 'அசோக்குமார் தற்கொலைக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தாரை தப்பட்டை படத்திற்காக கொடுத்த கடனை 'கொடி வீரன் ' படத்தின் மூலம் தந்துவிடுவதாக சசிகுமார் வாக்குறுதி அளித்திருந்தார். நான் கொடுத்த கடனை திருப்பி மட்டுமே கேட்டேன். நான் மிரட்டியதாக கூறுவதில் எந்த உன்மையும் இல்லை. எனவே அசோக்குமார் தற்கொலைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனக்கு முன் ஜாமீன் தேவை. இந்த வழக்கில் எப்போது வேண்டுமானாலும் நேரில் ஆஜராவேன் என்று உத்தரவாதம் தருகிறேன்' என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments