Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா ஸ்டிக்கர் ஒட்டலயோ! அம்மா ஸ்டிக்கர்!... மணமக்கள் நெற்றியை பதம் பார்த்த அதிமுகவினர்

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2016 (17:18 IST)
தமிழக முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 68 இளம் ஜோடிகளுக்கு அதிமுகவினர் இலவச திருமணம் நடத்திவைத்தனர்.


 
 
நேற்று உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற அதிமுகவினர் நடத்திய இலவச திருமணத்தில், 68 இளம் ஜோடிகளின் நெற்றியில் ஜெயலலிதா படம் பொருத்திய அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
 
இந்த திருமணத்தில் அமைச்சர்கள் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த திருமணத்தில் 68 மணக்களுக்கும் கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 68 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
 
68 மணமக்களின் நெற்றியிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்த புகைப்படங்கள், சமூக வலைதளாங்களில் வெளியாகின. அவை கிண்டல் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சென்னை மழை வெள்ளத்தின் போது நிவாரண பொருட்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட விவகாரம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.


 
 
இந்நிலையில் இலவச திருமணத்திலும் மணமக்கள் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது, சமூக வலைதளத்தில் இருப்பவர்களுக்கு மீண்டும் தீணி கிடைத்துள்ளது போல் உள்ளது. அம்மா ஸ்டிக்கரை விமர்சித்தும், கேலியும் கிண்டலுமாக சமூக வலைதளத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments