Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2021 தேர்தலில் யாருடன் கூட்டணி – பிரேமலதா விஜயகாந்த் பேச்சால் பரபரப்பு !

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (17:44 IST)
2021 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்


சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் வெற்றி வேட்பாளர்களின் பாராட்டு விழாக் கூட்டத்தில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ‘தேமுதிக மட்டுமே கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி ‘ எனக் கூற அதன் பிறகு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதற்கு எதிர்வினை ஆற்றினார்.

இதனால் கூட்டணிக் கட்சிகளுக்குள் விரிசல் விழுந்து உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் பிரேமலதா அதற்குள் மற்றொரு திரியைக் கொளுத்தி போட்டுள்ளார். இன்று சென்னையில் நிரூபர்களை சந்தித்த அவர் ‘கூட்டணி என்று சொல்லிவிட்டு கூட்டணி தர்மத்தை பின்பற்றவில்லை என்றால் மாற்று அணி என்பது போல ஆகிவிடும். இப்போது கூட்டணி நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் 2021 ஆம் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அந்த நேரத்தில் அறிவிப்போம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன பண்ணாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது..? - பாகிஸ்தான் மீது சேவாக் கடும் விமர்சனம்!

தயவு செஞ்சு ரிட்டயர்ட் ஆகாதீங்க.. நீங்கதான் இப்போ தேவை! - கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் எப்போது? புதிய தேதி அறிவிப்பு..

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

அடுத்த கட்டுரையில்
Show comments