Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரம்: 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (10:19 IST)
காவிரி விவகாரம் குறித்து கடந்த 2002ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், கடந்த 2007ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோதும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் காவிரி விவகாரத்தில் அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். ஆளுங்கட்சி சார்பில் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வர்.

இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள கி.வீரமணி திராவிடர் கழகம், எல்.கே.சுதீஷ் தேமுதிக உள்பட பல தலைவர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இந்த கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெறும் என்றும், கூட்டம் முடிந்ததும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடலூர் அருகே கடலில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீட்பு! களத்தில் இறங்கிய ஹெலிகாப்டர்..!

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. சில தேர்வுகளும் ரத்து..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் தொடர்ந்து குறைவு: எப்போது கரையை கடக்கும்?

இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

அடுத்த கட்டுரையில்
Show comments