Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டதாக அழகிரி மீதான வழக்கு ஒத்திவைப்பு

Webdunia
செவ்வாய், 24 மே 2016 (12:12 IST)
மு.க. அழகிரி தேர்தல் அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் வழக்கில், விசாரணையை ஜூன் மாதம் 24ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 

 
கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது மேலுார் அருகே அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் சுவாமி கோயிலுக்கு ஓட்டு சேகரிக்க திமுக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கட்சியினருடன் சென்றார்.
 
அப்போதைய தேர்தல் அலுவலர் காளிமுத்து அங்கு நடந்த நிகழ்வுகளை வீடியோ படம் எடுக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதில் ஏற்பட்ட பிரச்னையில் அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன், ஒன்றிய செயலாளர் ரகுபதி, நிர்வாகி வெள்ளையன் உட்பட 21 பேர் தன்னை தாக்கியதாக கீழவளவு காவல் நிலையத்தில் காளிமுத்து புகார் செய்தார்.
 
அழகிரி உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
 
அழகிரி, மன்னன் உட்பட 16 பேர் ஆஜராகவில்லை. அழகிரி சார்பில் வழக்கறிஞர் மோகன்குமாரும், மற்ற 18 பேருக்காக வழக்கறிஞர் எழிலரசனும் ஆஜராயினர். இதனால், இவ்வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments