1000 ரூபாய்க்கும் 2000 ரூபாய்க்கும் நடுவில் விஜய் சிக்கியுள்ளார். என்ன செய்ய போகிறாரோ?

Siva
திங்கள், 2 ஜூன் 2025 (12:41 IST)
திமுக அரசு தற்போது மகளிர் உதவி தொகை 1000 ரூபாய் கொடுத்து வரும் நிலையில், அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அந்த தொகையை 2000 ரூபாய் என உயர்த்தப் போவதாக அறிவிக்க இருப்பதாகவும், 1000 ரூபாய்க்கும் 2000 ரூபாய்க்கும் நடுவில் சிக்கிக் கொண்ட விஜய்,   பெண்களின் வாக்குகளை கவர என்ன வாக்குறுதி கொடுக்க திட்டமிட்டு உள்ளாரோ?" என பத்திரிகையாளர் பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உதவி தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த தொகையை தேர்தலை முன்னிட்டு 1500 ரூபாயாக உயர்த்த போவதாக கூறப்படுகிறது. 
 
ஆனால், இதை பின்னுக்கு தள்ளும் வகையில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில், மகளிர் உதவி தொகையாக மாதம் 2000 ரூபாய் கொடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
 
மகளிர் வாக்குகளை கவர விஜய் தனது பங்குக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என பத்திரிகையாளர் பாண்டியன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments