Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இரட்டை இலை சின்னத்துக்கு தொடங்கியது போர்!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (12:03 IST)
ஓபிஎஸ் அணி எடப்பாடி அணியுடன் இணைந்த பின்னும் இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் தினகரனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


 

 
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்துக் கொள்ளவில்லை என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இரட்டை சின்னத்தை மீட்பது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் சென்று பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெற நேற்று டெல்லி சென்றனர்.
 
சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் இன்று காலை தேர்தல் ஆணையரை சந்திக்க அனுமதி கோரியிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் தினகரன் அணி ஆதரவாளர்கள் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்தனர்.
 
அதில், கட்சியின் சின்னம், பொதுச்செயலாளர் பதவி போன்ற விவரங்களில் தங்களை கேட்காமல் முடிவு எடுக்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலி.. தமிழக முதல்வர் இரங்கல்..!

செங்கோட்டை- மயிலாடுதுறை உள்பட 9 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: தென்னக ரயில்வே

இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.. முதல்வர் தொடங்கி வைக்கிறார்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது. தொடரும் சிங்கள படையின் அட்டகாசம்.

திருப்பதி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு.. தேவஸ்தானம் மீது முதல்வர் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments