Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டுமரத்தில் சென்று இலங்கையுடன் போரிடுங்கள் பொறுக்கிகளா? சுவாமியின் சர்ச்சைக்குரிய டுவீட்

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (21:03 IST)
கடந்த சில மாதங்களாகவே பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய பதிவுகளை தனது டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். குறிப்பாக அவர் தமிழர்களை பொறுக்கிகள் என்று கூறி வருவது தமிழினத்தையே அவமானப்படுத்துவது போல் உள்ளது




இந்நிலையில் இன்று அதிகாலை தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்களை கொந்தளிக்க வைத்துள்ள நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை சுவாமி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

சுவாமி தனது டுவிட்டரில் 'தமிழக பொறுக்கிகள் நகர சாக்கடைகளில் மறைந்து வாழ்வதை விட்டுவிட்டு, கட்டுமரங்களை எடுத்துக் கொண்டு இலங்கை கடற்படைக்கு எதிராக போரிட வேண்டும்.”என கிண்டலாக பதிவிட்டுள்ளார்

சுவாமியின் இந்த டுவீட்டுக்கு பலர் பதிலடி கொடுத்து வருகின்றனர். மூத்த தலைவர் ஒருவர் மீனவரின் மறைவிற்கு அனுதாபம் தெரிவிக்காமல் இவ்வாறு சர்ச்சைக்குரிய பதிவு செய்துள்ளதை நடுநிலையாளர்கள் கூட கண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments