அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் ஒவ்வொரு மதுபானத்தின் விலைப்பட்டியல் கடை முன் வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் விற்பனையாளர் மற்றும் மேனேஜர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திருவாரூரைச் சேர்ந்த டாஸ்மார்க் கடை ஒன்றில் கூடுதல் விலைக்கு டாஸ்மாக் விற்பனையாளர் விற்பனை செய்ததை தட்டி கேட்ட குடிமகன் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
செந்தில் பாலாஜி கூறினாலும் கூடுதல் விலைக்கு தான் விற்போம் என்றும் மது பாட்டலுக்கு பில் தர முடியாது என்றும் அவர் கூறும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அமைச்சரின் எச்சரிக்கையையும் மீறி டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மதுபானம் பெற்று வருவது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குடிமகன்கள் தெரிவித்து வருகின்றனர்.