Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை ஆனதும் முதல்வேலையாக மகள் திருமணம்: நளினி கடிதம்

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (08:14 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேர் விடுதலை தற்போது கவர்னரின் கையில் உள்ளது. தமிழக அமைச்சரவை அனுப்பிய 7 பேர் விடுதலை குறித்த தீர்மானத்தில் இன்னும் கவர்னர் முடிவெடுக்காமல் உள்ளார்.

இந்த நிலையில் 7 பேர்களில் ஒருவராகிய நளினி ஊடகம் ஒன்றுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் விரைவில் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என நம்புவதாகவும், 7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு, நன்றி என்றும் கூறியுள்ளார்.

மேலும் விடுதலைக்கு பின் முதல் வேலையாக தனது மகளுக்கு லண்டனில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக நளினி நம்பிக்கையுடன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில், அதிமுக நிர்வாகிகள் 3 பேர் விடுதலைக்கு தான் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் நளினி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments