Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு மறுநாளும் ஈரோடு ஜவுளிக்கடைகளில் அலைமோதும் கூட்டம்.. காரணம் இதுதான்..!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (08:12 IST)
பொதுவாக தீபாவளிக்கு முந்தைய நாள் வரை ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதும் என்பது தெரிந்ததே. ஆனால் ஈரோடு நகரில் மட்டும் தீபாவளிக்கு மறுநாளும் ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதும். அதற்கு காரணம் ஒரு சில குறிப்பிட்ட கடைகளில் தீபாவளிக்கு மறுநாள் பாதி விலை என்ற சலுகை உட்பட சலுகை விலையில் ஏராளமான ஜவுளிகளை விற்பனை செய்வார்கள்.

 தீபாவளிக்கு வாங்கிய ஜவுளிகளில் விற்பனை செய்யாமல் மீதம் இருக்கும் ஜவுளிகளை தள்ளுபடி வெளியில் விற்பனை செய்வதால் தீபாவளிக்கு மறுநாளும் ஈரோடு நகரில் உள்ள ஜவுளிக்கடைகளில் மட்டும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

அந்த வகையில் இன்று காலையில் சலுகை அறிவிக்கப்பட்ட ஜவுளிக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.  குறிப்பாக ஆர்கேவி சாலையில் உள்ள ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதுவதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீபாவளிக்கு மறுநாள் ஈரோடு நகரில் 10க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளில் சலுகை விலையில் ஜவுளிகள் விற்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

மகாராஷ்டிராவில் தனித்து மெஜாரிட்டி பெற்ற பாஜக.. ஷிண்டேவுக்கு முதல்வர்? பதவி இல்லையா?

மோடி, அமித்ஷா,அதானி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: உத்தவ் தாக்கரே கட்சி குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..!

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

அடுத்த கட்டுரையில்
Show comments