Webdunia - Bharat's app for daily news and videos

Install App

120 வருடங்களுக்கு பிறகு தென்னிந்தியாவில் அதிக மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (13:11 IST)
கடந்த நவம்பர் முதலாக தென்னிந்தியாவில் பெய்த கனமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதலாக தென்னிந்திய மாநிலங்களில் கனமழை பெய்தது. முக்கியமாக தமிழகத்தில் அதிகளவு மழை பெய்தது. அதீத கனமழையால் சென்னையில் குடியிருப்புகள் நீரில் மூழ்கிய நிலையில், டெல்டா பகுதிகளில் வயல்கள் நீரில் மூழ்கியதால் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதீத கனமழையால் தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி வடகிழக்கு பருவமழையால் தென்னிந்தியாவில் 579.1 மி.மீ அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 1901ம் ஆண்டிற்கு பிறகு தென்னிந்தியாவில் அதிக அளவில் பதிவான மழை அளவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

பிச்சைக்காரருடன் ஓடி விட்டாரா மனைவி? கணவர் கொடுத்த புகாரால் பரபரப்பு..!

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள்.. தென்னக ரயில்வே அறிவிப்பு..!

மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்..!

டெல்லியில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ரூ.25 லட்சம்.. காங்கிரஸ் வாக்குறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments