Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை உரசிப் பார்க்கவேண்டாம்… சுதீஷுக்கு அதிமுக பேச்சாளர் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (10:13 IST)
அதிமுகவை உரசிப்பார்க்க வேண்டாம் என தேமுதிக துணைச் செயலாளர் எல் கே சுதீஷுக்கு அதிமுகவின் வைகைச் செல்வன் பதிலளித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான தேமுதிகவை ஆரம்பம் முதல் அதிமுக தலைமை கண்டுகொள்ளவே இல்லை. இதனை அடுத்து சமீபத்தில் அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் திடீரென தேமுதிக அழைப்பை ஏற்காமல் பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்துவிட்டது. இந்த நிலையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று திட்டமிட்டிருந்த நிலையில் எல்.கே.சுதீஷ் திடீரென ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்றால் அதிமுக என்ற கட்சியே இன்று இருந்திருக்காது என்றும் அதிமுக கூட்டணியை நாங்கள் அழைக்கவில்லை என்றும் அதிமுக தான் நம்மை அழைத்து உள்ளது என்றும் பேசியுள்ளார்.

சுதீஷின் இந்த பேச்சு அதிமுகவினர் இடையே அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் மேடைப் பேச்சாளரான வைகைச்செல்வன் ‘யாரிடமும் கெஞ்ச வேண்டிய  எங்களுக்கு அவசியமில்லை. சுதீஷ் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் அப்படிப் பேசியிருக்கலாம். ஆனாலி, அதிமுகவை உரசிப் பார்க்கும் செயலில் தேமுதிக இறங்க வேண்டாம்’ என எச்சரிக்கும் விதமாகப் பேசியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விசிக, நாம் தமிழர்கள் மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை.. அரசாணை வெளியீடு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் அதிருப்தியா?

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments