கைது செய்யப்பட்ட ஜெயக்குமார்! - #WeStandWithJayakumar ட்ரெண்ட் செய்யும் அதிமுகவினர்!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (09:49 IST)
திமுக தொண்டரை தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சருக்கு ஆதரவாக அதிமுகவினர் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் இன்று மறு தேர்தல் நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது வாக்குச்சாவடி அருகே திமுக தொண்டருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதனால் திமுக தொண்டரை தாக்கிய ஜெயக்குமார் அவரை சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக இழுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து ஜெயக்குமார் கைதுக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிமுகவினர் ட்விட்டரில் #WeStandWithJayakumar என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் ரவியை திடீரென சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி.. என்ன காரணம்?

சென்னையில் ஆபரண தங்கம் விலை மீண்டும் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000.. அதிகாரபூர்வ அறிவிப்பு.. கிடைப்பது எப்போது?

சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த தாய்-மகன் கைது.. 4,200 போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மாற்றமில்லை.. திடீர் முடிவெடுத்த அதிகாரிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments