தினகரக்கு எதிரான தீர்மானம்னு சொல்லாமலே கையெழுத்து வாங்கிட்டாங்க - அதிமுக நிர்வாகி பல்டி

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (17:06 IST)
அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினரனுக்கு எதிராக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்திட்ட அதிமுக நிர்வாகி, தற்போது தினகரனுக்கு ஆதரவாக பேச் தொடங்கியுள்ளார்.


 

 
தினகரனுக்கும், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அணியின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 10ம் தேதி  நடந்தது.  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ள அந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
அதில் தினகரனுக்கு எதிராக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக, தினகரனை மீண்டும் கட்சியில் சேர்த்து அவரை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தது சட்ட விரோதம், தினகரன் அறிவித்த அறிவித்த நியமண பட்டியல் கட்சியின் விதிப்படி செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


 

 
அதேபோல், ஜெயலலிதா அளித்த கடிதத்தில் தினகரன் பெயர் இல்லை எனக்கூறி தேர்தல் ஆணையம் ஏற்கனவே நிராகரித்தது எனவும், 5 ஆண்டுகள் உறுப்பினராக இல்லாததால், தினகரனால் துணைப் பொதுச்செயலாளாரக நீடிக்க முடியாது எனவும் அதிரடியாக தீர்மானம் போட்டனர். 
 
இந்த விவகாரம், தினகரன் தரப்பிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எடப்பாடி அணியினர் நிறைவேற்றிய தீர்மானத்தில் கையெழுத்திட்ட ஒரு அதிமுக நிர்வாகி தற்போது எடப்பாடி அணிக்கு எதிராக திரும்பியுள்ளார். அந்த தீர்மானத்தில் மொத்தம் 27 பேர் கையெழுத்து இட்டிருந்தனர். அதில் விவசாய அணி நிர்வாகிகளில் ஒருவரான துரை கோவிந்தராஜன், தினகரனுக்கு எதிரான தீர்மானம் என்பதை என்னிடம் கூறாமலேயே தன்னிடம் எடப்பாடி அணி கையெழுத்து பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மேலூரில் தினகரன் தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments