Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா முதலமைச்சராவாரா?: அதிமுக எம்எல்ஏக்கள் அவசர கூட்டம்!

சசிகலா முதலமைச்சராவாரா?: அதிமுக எம்எல்ஏக்கள் அவசர கூட்டம்!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2016 (09:48 IST)
அதிமுக பொதுக்குழு நேற்று கூடி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ள நிலையில் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வருகின்றன.


 
 
சென்னை வானகரத்தில் நேற்று கூடியது அதிமுக பொதுக்குழு கூட்டம். இந்த கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமானது சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
 
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு அவசரமாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக அமைசர்கள் கடந்த சில நாட்களாக கூறிவரும் நிலையில் இன்று நடைபெறும் இந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா முதல்வராவது குறித்து விவாதிக்கப்படும் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments