Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் இதை செய்ய தயாரா? சூப்பர் ஐடியா கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2017 (13:12 IST)
சினிமா துறையில் கந்து வட்டியை ஒழிக்க நடிகர்களே நிதி திரட்டி சிறு தயாரிப்பாளர்களுக்கு குறைந்த வட்டியில் பணம் கொடுக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் நல்ல யோசனை ஒன்றை கூறியுள்ளார்.
 
பிரபல நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமர் தற்கொலை செய்து கொண்டது தமிழ் சினிமா துறையில் உள்ள கந்துவட்டி கொடுமையை வெளிக்கொண்டு வந்துள்ளது. இயக்குநர் சுசீந்திரன், கமல் உள்ளிட்ட பலரும் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் தான் அசோக் குமார் தற்கொலைக்கு காரணம்.
 
அன்புச்செழியன் கந்துவட்டியை வைத்து தமிழ் சினிமா துறையை தன் கைக்குள் வைத்து பலரையும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளதாக தொடர்ந்து தகவல் வந்து கொண்டே இருக்கிறது. தற்போது தலைமறைவாகியுள்ள அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் மதுரைக்கு விரைந்துள்ளனர்.
 
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால், அன்புச்செழியன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அசோக் குமார் ஆத்மா சாந்தியடையும். அன்புச்செழியனை காப்பாற்ற அமைச்சரோ, எம்.எல்.ஏ.வோ யார் வந்தாலும் விட மாட்டோம் என ஆக்ரோஷமாக பேசினார்.
 
இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து பேசியதாவது:-
 
ஆதாரமில்லாமல் அரசு மீது புழுதிவாரி அடிக்க வேண்டாம். சினிமா துறைக்கு நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் உள்ளன. நடிகர்கள் தலா ஒரு கோடி என சுழற்சி நிதி அடிப்படையில் ரூ.500 கோடி சேகரித்து சிறு தயாரிப்பாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கலாம் என்றார்.
 
இனி வரும் காலத்தில் சினிமா துறையில் கந்துவட்டி கொடுமையை ஒழிக்க அமைச்சர் ஜெயக்குமார் நல்ல யோசனை ஒன்றை கொடுத்துள்ளார். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் நடிகர் விஷால் இதை செய்ய முன்வருவாரா என கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments