Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெய்டுக்கு எதிர்ப்பு - அதிமுகவினர் போராட்டம்; போலீஸ் குவிப்பு!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (09:03 IST)
லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு முன் அதிமுகவினர் போராட்டம். 

 
ஏற்கனவே கடந்த சில மாதங்களில் ஒரு சில அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சியில் உணவு துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 
 
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் அவருடைய வீட்டில் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் காமராஜ் அவரது மகன்கள் உள்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 
 
சென்னை, திருவாரூர், தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு முன் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றத்தை தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!

வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments