Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒற்றைத் தலைமைப் பற்றி மூச்… ஐந்து தீர்மானங்கள் மட்டுமே- முடிந்தது அதிமுக நிர்வாகிகள் கூட்டம் !

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (13:26 IST)
காலையில் தொடங்கிய அதிமுக நிர்வாகிகள் கூட்டம்  வெறும் ஒன்றரை மணிநேரத்தில் முடிந்துள்ளது.

அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற ராஜன் செல்லப்பா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பேசியது அக்கட்சிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ராஜன் செல்லப்பா ஓபிஎஸ் சொல்லிதான் அப்படி பேசுகிறார் என்று பலரும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனையடுத்து  அதிமுகவுக்குள் எழுந்துள்ள சலசலப்புகளை தீர்க்க அவசரமாக சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

காலையில் தொடங்கிய இந்தக் கூட்டம் ஆரம்பித்து ஒன்றரை மணிநேரத்தில் முடிந்துள்ளது. கூட்டத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மட்டுமே பேசியிருக்கிறார்கள். ஆனால் கூட்டத்தில் ஒற்றைத்தலைமை பற்றி யாருமே எதுவும் பேசவில்லை எனத் தெரிகிறது.

கூட்டத்தில் 5 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். முதல் தீர்மானமாக மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றியும், இரண்டாவது தீர்மானமாக அதிமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி தெரிவித்தலும் பிரதமரை முன்மொழியும் வாய்ப்பினை அதிமுகவுக்கு அளித்தமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து மூன்றாவது தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.நான்காவதாக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை உடனடியாக துவங்கி மக்கள் மனங்களை வென்றெடுப்போம் என்றும் இறுதி தீர்மானமாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மக்கள் பணியினைத் தொடர்தல் என்றும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

அடுத்த கட்டுரையில்
Show comments