Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி உண்ணாவிரதத்திற்கு அதிமுகவே காரணம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (16:04 IST)
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் முழுவதையும் நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் அமளி செய்ததற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி நாளை உண்ணாவிரதம் இருக்கவுள்ளார். இருப்பினும் அவர் தன்னுடைய வழக்கமான அலுவல்களள கவனிப்பார் என்று கூறப்பட்டது.
 
இந்த உண்ணாவிரதம் குறித்து கருத்து கூறிய தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'அ.தி.மு.க.வினரின் போராட்டத்தினால் பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கிறார்' என்று கூறினார். மேலும் அவர் இதுகுறித்து கூறியபோது, 'நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் நடத்திய போராட்டத்தினால் தான் இரு அவைகளும் முடங்கியது.  அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடி நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கிறார் என கூறியுள்ளார்.
 
பாராளுமன்ற கூட்டம் தொடங்கிய நாள் முதல் அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு கோஷங்களையும் எழுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments