Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை - ஓபிஎஸ் தரப்பினர் !!

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2022 (12:37 IST)
அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை என ஓபிஎஸ் தரப்பினர் பேட்டி. 

 
அதிமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் கூடியபோது அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழு கூட்டம் சிறிது நேரத்தில் முடிவடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அவை தலைவர் தமிழ்மகன் கூறியது ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்கூட்டம் இடம் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியன நிலையில் பின்னர் அதிமுக பொதுக்கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறும் என கூறப்பட்டது.
 
இந்நிலையில் இதனைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் கொரோனா மேலும் அதிகரித்து வருவதால் ஆன்லைன் முறையில் பொதுக்குழுவை நடத்த பரீசலீக்கப்பட்டு வருகிறது. பொதுக்குழு கூட்டம் குறித்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனிடையே ஓ.பி.எஸ் தரப்பினர் இது குறித்து கூறியுள்ளதாவது, அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை. தலைமை கழகம் அழைப்பு என்ற பெயரில் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையதல்ல. பழனிச்சாமி தரப்பு சர்வாதிகார மனநிலையுடன் செயல்படுவதாக பன்னீர்செல்வம் தரப்பு குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்