Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொள்ளாச்சி விவகாரம் – ’பார்’ நாகராஜன் கட்சியில் இருந்து நீக்கம் !

பொள்ளாச்சி விவகாரம் – ’பார்’ நாகராஜன் கட்சியில் இருந்து நீக்கம் !
, செவ்வாய், 12 மார்ச் 2019 (08:44 IST)
பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கி கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்ததாகவும், அதில் பார் நாகராஜன் என்பவர்  பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளராக இருப்பதால் அவரை மட்டும் போலிஸார் விடுவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

அதிமுக பிரமுகர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதால் அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சம்மந்தப்பட்டவர்களை அதிமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான குரல்கள் வலுவாக எழ ஆரம்பித்தன.

இதனால் நேற்றுக் காலை வரை பார் நாகராஜன் என்பவர் அதிமுக பிரமுகர் இல்லை எனக் கூறி வந்த அதிமுக, நேற்று மாலை பார் நாகராஜனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியா?