Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க தலைமையில்தான் கூட்டணி; முதல்வர் வேட்பாளர் யார்? – பரபரப்பை கிளப்பும் பாஜக!

Tamilnadu
Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (12:36 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் முதல்வர் வேட்பாளர் தேர்தலுக்கு பிறகே முடிவு செய்யப்படுவார் என பாஜக தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னை வந்த அமித்ஷா முன்னிலையில் அதிமுக – பாஜக கூட்டணியை ஈபிஎஸ் – ஓபிஎஸ் உறுதி செய்தனர். இந்நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியே கூட்டணிக்கும் முதல்வர் வேட்பாளர் என அதிமுக தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என பாஜக தரப்பில் பேசி வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இதனால பாஜக – அதிமுக இடையே தொடர்ந்து சர்ச்சை எழுந்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எல்.முருகனுடன் பேட்டியளித்த பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும், தேர்தலுக்கு பிறகே முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக தனது முடிவை தெரிவித்த பிறகும் பாஜக தொடர்ந்து அந்த முடிவுக்கு எதிராக பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments