Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுக்குழு வழக்கின் தீர்ப்புடன் தேர்தல் ஆணையம் செல்லும் அதிமுக வழக்கறிஞர்கள்..!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (09:54 IST)
அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி அணிக்கு சாதகமாக வந்தது என்பதும் தெரிந்ததே. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக பொது குழு கூடியது என்பதும் அந்த பொது குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறை நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் என்ற பதவி கொண்டு வருவதாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகலுடன், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்களை ஏற்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் இன்று மனு அளிக்க உள்ளனர்
 
இந்த மனுவுக்கு பின் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக என அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

விமான விபத்தில் இறந்த துணை அதிபர்.. இறுதி ஊர்வல வாகனமும் விபத்து! – மலாவியில் சோகம்!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments