Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப்-4 தேர்வில் கூடுதலாக 480 காலியிடங்கள் சேர்ப்பு.! டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.!!

Senthil Velan
புதன், 11 செப்டம்பர் 2024 (20:45 IST)
குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.  
 
கடந்த ஜூன் 9ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். 
 
தேர்வு முடிவு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி கடந்த வாரம் அறிவித்தது. 
 
இந்நிலையில், அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) மற்றும் பாரஸ்டர், பாரஸ்ட் வாட்சர், பில் கலெக்டர், உள்ளிட்ட பதவிகளில் கூடுதலாக 480 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 


ALSO READ: டிரக் - பேருந்துகளுக்கான புதிய ரேடியல் டயர்.! சியேட் நிறுவனம் அறிமுகம்..!!
 
இதைத்தொடர்ந்து, குருப்-4 தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை 6244-லிருந்து 6724 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை!

மக்களவையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்.. எதிர்க்கட்சிகளின் ரியாக்சன் என்ன?

இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை? வானிலை எச்சரிக்கை..!

அதானி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நீதிமன்றம் உத்தரவு..!

அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து! மறு தேர்வு தேதி அறிவிப்பு வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments