Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மந்திரவாதியின் பிடியில் கவர்ச்சி நடிகை பாபிலோனா - மீட்டுத்தர பாட்டி புகார்

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (11:44 IST)
மந்திரவாதியின் பிடியில் இருக்கும் தனது பேத்தி நடிகை பாபிலோனாவை, அவரிடமிருந்து மீட்டுத் தருமாறு, அவரின் பாட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்ட விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்தவர் பாபிலோனா. இவர் ஒரு மந்திரவாதியின் பிடியில் சிக்கி இருப்பதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவரின் 80 வயது பாட்டி கிருஷ்ணகுமாரி கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். இவர் சென்னை சாலிகிராமத்தி வசித்து வருகிறார்.
 
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :
 
பாபிலோனாவை நான்தான் வளர்த்தேன். அவரை திரை உலகத்தில் அறிமுகப்படுத்தி நடிகையாக வளர்த்துவிட்டேன். தற்போது அவர், ஒரு மந்திரவாதியின் பிடியில் சிக்கியுள்ளார். வசியக்கலை மூலம் அவரை வசியப்படுத்தி தன்னுடைய பிடியில் அவர் வைத்துள்ளார். என் பேத்தியிடம் இருந்த நகைகள் மற்றும் பணம் அனைத்தையும் அபகரித்துவிட்டார். 


 

 
அந்த மந்திரவாதி ஏற்கனவே திருமணமானவர். அவரால் என் பேத்தியின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. என் பேத்தியை விட்டு விடுமாறு அவரிடம் கெஞ்சினேன். ஆனால், அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். 
 
மேலும், அவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என தெரிகிறது. எனவே அவரின் பிடியிலிருந்து எனது பேத்தியை பத்திரமாக மீட்டுத்தர வேண்டும். மேலும், அந்த மந்திரவாதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்