நடிகர் வடிவேல் காணவில்லை: போஸ்டரால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2015 (14:00 IST)

நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த தியாகு என்பவர் நேற்று வடிவேலுவுக்கு எதிராக, "நடிகர் வடிவேலுவை காணவில்லை" என்று சென்னை நகரின் சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 


 


கடந்த நான்கரை வருடங்களாக நடிகர் வடிவேலுவை காணவில்லை என்று அந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த தியாகு சென்னையில் சில இடங்களில் ஒட்டி  இருந்தார்.

நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் கட்சியினர் நுழைந்து போஸ்டர் ஒட்டியது ஏன் என்ற கேள்வி தற்போது பாண்டவர் அணியினர் மத்தியில் எழுந்துள்ளது. நடிகர் வடிவேல் பாண்டவர் அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நடிகர் சங்கத்தை காணவில்லை என்று மதுரையில் சில நாட்களுக்கு முன்பு  நடிகர் வடிவேல் பேசியுள்ளார்.

வடிவேலுவுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த போஸ்டர் குறித்து நடிகர் வடிவேலுவின் ரசிகர்கள் போலீசில் புகார் அளிக்க தற்போது முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரானுடன் பிஸ்னஸ் பண்ணா இதான் வரி!... அடங்காத அமெரிக்க அதிபர் டிரம்ப்!...

இனி சினிமா சிபிஐ அல்ல, அசால்ட்டா சமாளிக்க.. நிஜ சிபிஐ.. விஜய் எப்படி சமாளிப்பார்?

விஜய் பிரிக்கிறது எல்லாமே திமுக ஓட்டு.. எனவே பாஜகவால் விஜய்க்கு எந்த பிரச்சனையும் வராது: அரசியல் விமர்சகர்..!

ஈரானிலிருந்து அமெரிக்க மக்கள் வெளியேற உத்தரவு.. தாக்குதல் நடத்த திட்டமா?!...

டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறாரா ஜிவி பிரகாஷ்? என்ன காரணம்?

Show comments