Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

Siva
திங்கள், 11 நவம்பர் 2024 (17:13 IST)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் எஸ்.வி. சேகர், "எல்லோரும் விரும்பும் திராவிடனாக இருக்க விரும்புகிறேன்" என்றும், "இனி மேல் நான் பாஜகவில் இல்லை" என்றும் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

"என்னுடைய ஓட்டு தான் பாஜகவுக்கு தேவை, பாஜகவின் ஓட்டு எனக்கு தேவையில்லை," என்று கூறிய எஸ்.வி. சேகர், "நான் ஐந்து வருடம் எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளேன். அந்த ஐந்து வருடத்தில் ஒரு ரூபாய் கூட கமிஷன் வாங்காத எம்.எல்.ஏ. என்பதை நான் உறுதி செய்துள்ளேன்," என்று தெரிவித்தார்.

அவர் மேலும், "அண்ணாமலை இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆகாத அரசியல்வாதி. அண்ணாமலை போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகள் இருக்கும் அரசியலில் நான் இருக்க விரும்பவில்லை. எனவேதான் நான் என்னுடைய பாஜக மெம்பர்ஷிப்பை சிறப்பை புதுப்பிக்கவில்லை.

மோடி அழைத்தார் என்பதற்காக தான் நான் பாஜகவில் இணைந்தேன். என்னை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று அண்ணாமலை தலைகீழாக தண்ணி குடித்து பார்த்தார், ஆனால் அவரால் முடியவில்லை. தற்போது நானே அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளேன். இனி நான் அரசியலில் ஈடுபட போவதில்லை. எல்லோருக்கும் நண்பனாக, ஒரு இந்தியனாக, ஒரு தமிழனாக, ஒரு திராவிடனாகவே இருக்க விரும்புகிறேன்," என்று கூறினார்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments