Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா - விஷால் காரணமா?

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (12:31 IST)
நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


 
நடிகர் சங்க தேர்தலில் விஷாலுடன், நடிகர் கார்த்திக், நாசர், பொன் வண்ணன் ஆகியோர் களம் இறங்கினர். தற்போது, பொன்வண்ணன் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
 
அந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டியிட முயன்றார். ஆனல், அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதற்கு முன்பே சேரன், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் விஷாலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் பொதுக்குழு கூட்டத்திலும் இருதரப்பினருக்கும் மோதல் எழுந்தது. இதனால், கூட்டம் தொடங்கிய 10 நிமிடத்திலேயே பொதுக்குழு முடிவிற்கு வந்தது.
 
இந்நிலையில், நடிகர் பொன் வண்ணன் தனது ராஜினாமா கடிதத்தை, நடிகர் சங்க தலைவர் நாசரிடம் அளித்துள்ளார். ஆனால், அவரின் ராஜினாமாவை நடிகர் சங்கம் இதுவரை ஏற்கவில்லை. நடிகர் சங்கம் ஏற்காவிட்டாலும் ராஜினாமா செய்வதில் தான் உறுதியாக இருப்பதாகவும், நடிகர் சங்க நடவடிக்கைகளில் இனிமேல் ஈடுபடப்போவதில்லை எனவும் பொன்வண்ணன் கூறியுள்ளார். 
 
ஆர்.கே.நகரில் போட்டியிடுவது விஷாலின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், அது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளால் நிர்வாகிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை என பொன்வண்ணன் தரப்பு கருதுவதாக தெரிகிறது.
 
இந்நிலையில், அவரிடம் விஷால், நாசர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம்பெண் டிஜிட்டல் கைது.. ஆடையை கழற்ற சொல்லி அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்..!

தமிழக வெள்ள பாதிப்பு: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக..!

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments