டிசம்பர் 4ம் தேதி ; அப்பல்லோவில் பரபரப்பு - மனோபாலா வெளியிட்ட பகீர் தகவல்

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2017 (15:37 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர் நடிகர் மனோபாலா. ஜெ.வின் மறைவிற்கு பின் அவர் தற்போது ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளராக மாறியுள்ளார்.


 

 
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கொடுத்த ஒரு பேட்டி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியது இதுதான்:
 
ஜெயலலிதா உடல் நலம் பற்றி விசாரிப்பதற்காக நான் டிசம்பர் 4ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு சென்றேன். லிஃப்டில் ஏறி மேல் தளத்திற்குஇ சென்றேன். அப்போது அங்கு அனைத்து எம்.எல்.ஏக்களும் இருந்தனர். அனைவரும் மௌனமாக நின்று கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு ஒரு சினிமா காட்சி போல் அது இருந்தது. அப்போது, ஒரு அமைச்சரின் உறவினர் என்னிடம் வேகமாக ஓடிவந்து  “அண்ண.. ஷூட்டிங் இருந்தால் கேன்சல் செய்து விட்டு வீட்டிற்கு செல்லுங்கள்” எனக் கூறினார். 
 
ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த நான், படப்பிடிப்பை கேன்சல் செய்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டேன். ஆனால், மறுநாள் காலை வரை எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே, அவர் ஏன் என்னிடம் அப்படி கூறினார் எனத் தெரியவில்லை. நடிகர்கள் ஆனந்தராஜ், விந்தியா ஆகியோரை நான் பாராட்டுகிறேன். அவர்களின் தைரியம் நிச்சயம் எனக்கில்லை” எனக் கூறினார்.
 
முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்து விட்டதாகவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் மனோபாலாவின் பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments