Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க கட்டிடம்..! ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய நடிகர் தனுஷ்...!!

Senthil Velan
திங்கள், 13 மே 2024 (17:28 IST)
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு நடிகர் தனுஷ் இன்று ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். 

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முன்பு கணக்கிடப்பட்டது.
 
இதற்காக நடிகர்கள் கமல், விஜய், உதயநிதி, நெப்போலியன் ஆகியோர் ரூ. 1 கோடி வைப்புநிதியாக முன்பு வழங்கினர். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 50 லட்சம் வழங்கினார்.  இந்நிலையில் இன்று நடிகர் தனுஷ் ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
 
புதிய கட்டிடப் பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக ரூ. 1 கோடியை தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோரிடம் தனுஷ் வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments