Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை

Webdunia
புதன், 29 ஜூலை 2015 (09:36 IST)
அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நாளை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
 
இந்த இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். மேலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று  கூறப்பட்டது.
 
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாக அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்குப் பதிலாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தனது உடல்நிலை காரணமாக அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை என்று ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார்.
 

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

Show comments