Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் நாளை பொது விடுமுறை: தொழிலாளர் ஆணையம் உத்தரவு

Webdunia
புதன், 29 ஜூலை 2015 (16:40 IST)
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைத்து தொழில் நிறுவனங்களும் நாளை பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,
 
முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்கள் மறைவையொட்டி அன்னாரது இறுதிச்சடங்கு நாளை (ஜூலை 30 ஆம் தேதி) இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் நடைபெறுகிறது.
 
இதை முன்னிட்டு தமிழக அரசு அன்றைய தினத்தை (30 ஆம் தேதி) பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.  அன்றைய தினம் முன்னாள் குடியரசு தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக Negotiable Instruments Act 1881-ன் கீழ் அனைத்து தொழில் நிறுவங்களும் ஒரு நாள் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 
மேலும் அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களுக்கும் பொதுவிடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

Show comments