Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மறுநாள் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2015 (13:13 IST)
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு ராமேஸ்வரத்தில் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
அப்துல் கலாம் உடல் சொந்த மண்ணில் அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதேபோல பலரும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
 
இதைத் தொடர்ந்து அப்துல் கலாமின் உடல் நாளை மதியம் 1 மணியளவில் ராமேஸ்வரம் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் வைக்கப்பட்டுள்ள, அப்துல் கலாமின் உடலுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

Show comments