Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 பால் வகைகளை சந்தைப்படுத்த திட்டம்: ஆவின் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (12:44 IST)
ஆவின் நிறுவனத்தில் 3 பால் வகைகளை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
டிலைட், சமன்படுத்தப்பட்ட மற்றும் நிறை கொழுப்பு பால் வகைகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
3.5% கொழுப்பும், 8.5% இதர சத்துக்களும் கொண்ட ஊதா நிற பாக்கெட்டுகள், 3% கொழுப்பும், 8.5% இதர சத்துக்களும் கொண்ட இளஞ்சிவப்பு நிற பால் பாக்கெட்டுகள் மற்றும் 6% கொழுப்பும், 9% இதர சத்துக்களும் கொண்டிருக்கும்  ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுக்கள் என 3 வகை பால் வகைகளை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மேலும் தமிழகம் ழுமுவதும் 10000-க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களின் தேவையை அறிந்து ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், பால் மற்றும் பால் உபபொருட்களின் தேவை மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளதால், விற்பனை நிலையங்களை அதிகரிக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலா பகுதிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments