Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ரூபாய்க்கு ஆவின் டிலைட் ஊதா நிற பால்.. இன்று முதல் விற்பனை!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (12:07 IST)
10 ரூபாய்க்கு ஆவின் டிலைட் ஊதா நிற பால் இன்று முதல் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் விற்பனை செய்யப்படும் என ஆவின் தெரிவித்துள்ளது.  
 
ஆவின் பச்சை நிற பால் நிறுத்தப்பட போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு கடும் கண்டனங்கள் இருந்ததால் பச்சை நிற பால் வழக்கம்போல் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்திருந்தது. 
 
ஆனால் அதே நேரத்தில் ஊதா நிற பால் 21 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று முதல் ஆவின் டிலைட் 200 மில்லி லிட்டர் ஊதா நிற பால் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
முதல் கட்டமாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இந்த பால் விற்பனை செய்யப்படும் என்றும் இதில் கொழுப்பு சத்து 3.5 சதவீதம் இருக்கும் என்றும் இந்த பாலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தால் தமிழகமெங்கும் விற்பனை செய்யப்படும் என்றும் ஆவின் ஆவின் தெரிவித்துள்ளது.  
 
ஆவின் டிலைட் ஊதா நிற பால் அனைத்து வயதினரும் பருகும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி இருப்பதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் போதைப்பொருள் கும்பல் கைது.. ஆயுத விற்பனையும் செய்தார்களா?

தடையை மீறி யாத்திரை: மதுரையில் நடிகை குஷ்பு கைது

ஸ்பீட் ப்ரேக்கரில் மோதி திரும்ப வந்த உயிர்..! மகாராஷ்டிராவில் ஆச்சர்ய சம்பவம்!

காலை முதல் அமலாக்கத்துறை சோதனை: முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை

கணவன் கழுத்தில் கயிறு கட்டி தெருவில் இழுத்து சென்ற மனைவி.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments