Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம்.. ஆதவ் அர்ஜுனா மனைவி அறிக்கை..!

Mahendran
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (09:55 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்  என்ற கட்சியில் சமீபத்தில் இணைந்த நிலையில் அவருக்கு  தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது.
 
சமீபத்தில் நடைபெற்ற த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, ஆதவ் அர்ஜுனாவின் மேலாண்மையில் சிறப்பாக நடத்தப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், தி.மு.க. மற்றும் பா.ஜ.க. மீது கடுமையாக விமர்சனம் நிகழ்த்தினார்.
 
இந்த நிலையில், தனது கணவரின் அரசியல் பயணத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் ஒருங்கிணைக்காமல் வைத்திருக்க தீர்மானித்துள்ளதாக ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
நாங்கள் எப்போதும் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை தனியாக வைத்திருக்க விரும்புகிறோம். அரசியல் மற்றும் தொழில் சார்ந்த அனைத்து முடிவுகளும் தனிப்பட்ட முறையில் எடுக்கப்படுகின்றன.
 
எங்கள் குடும்பத்திற்கும் அரசியல் முடிவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் கருத்துக்களில் தனித்துவம் உள்ளது. ஒருவருக்கொருவர் தனியுரிமையையும் கருத்துகளையும் மதிக்கிறோம். தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும். எங்கள் குடும்பத்தை தொழில்சார் அல்லது பொது விவகாரங்களில் இழுக்க வேண்டாம்’ எஎன்று கேட்டுக்கொண்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துண்டு காகிதத்தை பார்க்காமல் அமைச்சர்கள் பெயர்களை சொல்ல முதல்வர் தயாரா? பிரசாந்த் கிஷோர் சவால்

மார்ச் மாதம் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. முன்னேற்பாடு செய்து கொள்ளுங்கள்..!

போதையில் 17 வயது சிறுவன்.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சுட்டு கொல்ல என கூறும் தாய்..!

பாகிஸ்தான், நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்! - மக்கள் அதிர்ச்சி!

“தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்” - மும்மொழிக் கொள்கை போராட்டம் வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments