Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக்காக கணவனை கட்டிப்போட்டு சூடுவைத்து கொடுமைபடுத்திய மனைவி

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (14:44 IST)
சென்னிமலையில் பெண் ஒருவர் சொத்திற்காக கணவனை கட்டிப்போட்டு சூடு வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு புது வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (50). இவரது மனைவி லலிதா (45). இவர்களுக்கு ஸ்ரீநாத் (20) என்ற மகன் உள்ளார்.  ரமேஷிற்கு நிறைய சொத்துக்கள் உள்ளது. 
 
இந்நிலையில் ரமேஷ் பேரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் தனது பெயரில் மாற்றிக்கொடுக்கும்படி அவரது மனைவி லலிதாவும், மகன் ஸ்ரீநாத்தும் ரமேஷை டார்ச்சர் செய்து வந்துள்ளனர்.
 
ஆனால் ரமேஷ் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு பார்க்கலாம் என கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது சண்டை இருந்து வந்துள்ளது.
 
சமீபத்தில் இது சம்மந்தமாக அவர்களுக்குள் சண்டை ஏற்படவே லலிதாவும், ஸ்ரீநாத்தும் சேர்ந்து, ரமேஷை ஒரு ரூமில் கட்டிப்போட்டு சித்ரவதை செய்தனர். இருவரும் சேர்ந்து அவரது உடலில் பல இடங்களில் சூடுபோட்டு சித்ரவதை செய்தார்கள்.
 
இதனையறிந்த அவரது பக்கத்து வீட்டுக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ரமேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் லலிதாவையும், ஸ்ரீநாத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

சென்னை மலர் கண்காட்சி: நுழைவுக் கட்டணம் மேலும் அதிகரிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு..!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. இன்று ஒரே நாளில் 9 காசுகள் சரிந்ததால் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments