Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் ஏரியாக்குள்ள வந்து என் டீச்சரை அவமதித்த அந்த நபரை சும்மா விட மாட்டேன்! - அன்பில் மகேஸ் ஆவேசம்!

Prasanth Karthick
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (11:17 IST)

சென்னை அரசுப்பள்ளியில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சி சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் அந்த ஆன்மீக சொற்பொழிவாளருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ள புகைப்படம் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் சுயமுன்னேற்ற சொற்பொழிவு என ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியதும், அதை தட்டிக்கேட்ட ஆசிரியரை மோசமாக பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

இந்நிலையில் தற்போது ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணுவுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அமைச்சரின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.

 

இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான அதே பள்ளியில் இன்று மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ், ஆன்மீக பேச்சாளரை தட்டிக்கேட்ட பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரை மேடையில் சால்வை போர்த்தி பாராட்டினார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “4 நாட்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை ஆசிரியரா? உயரதிகாரிகளா? யார் காரணம் என்பது விசாரிக்கப்பட்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்
 

ALSO READ: அந்த ஆசிரியர் பெயர் ஜான்சன், ஜஹாங்கீர் என இருந்திருந்தால்..? பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு! - எம்.பி சு.வெங்கடேசன் பதிவு!
 

அசோக் நகர் அரசுப் பள்ளி பல சாதனைகளை முன்னெடுத்த பள்ளி, இங்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது வேதனைக்குரியது, கண்டிக்கக் கூடியது. 

 

ஒவ்வொரு மாதமும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் இது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

 

மேலும் மகாவிஷ்ணுவுடன் இருக்கும் புகைப்படம் குறித்து பேசிய அவர் “தினமும் நூற்றுக்கணக்கான விசிட்டர்கள் என்னை பார்க்கின்றனர். அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அதற்காக நான் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளேன் என்பது தவறான செய்தி

 

எவ்விதத்திலும் கொள்கையில் சமரசம் என்பது இல்லை. புதிய கல்விக்கொள்கையை கூட நாங்கள் அதற்காக ஏற்கவில்லை. ன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், என் ஆசிரியரை அவமானப்படுத்தி பேசிய அந்நபரை சும்மா விடமாட்டோம்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments