Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''குறுகிய காலத்தில் 1.50 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கி சாதனை ''- முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (14:59 IST)
குறுகிய காலத்தில் 1,50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கிய இந்திய அளவில் தமிழகம் சாதனை செய்துள்ளதாக முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்து வருகிறது.

இந்த நிலையில்,  ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு  வழங்கும் திட்டம் 2021 செப்டம்பர்  23 -ல் துவக்கி வைக்கப்பட்ட நிலையில், குறுகிய காலத்தில் 1,50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கியுள்ளது திமுக அரசு.

இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின், "குறுகிய காலத்தில் 1,50,000 இலவச மின் இணைப்புகளை வழங்கி, தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் இதுவரை எந்த அரசும் செய்திடாத மிகப்பெரும் சாதனையை நாம் செய்திருக்கிறோம் என்றும், பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதால் இன்று என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது”என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ: மதுரை பட்டாசு ஆலை வெடிவிபத்து : ரூ.5 லட்சம் நிதியுதவி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
 
குறுகிய காலத்தில் 1,50,000 இலவச மின் இணைப்புகளை வழங்கி, தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் சாதனை புரிந்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments