10 மணி நேரமாக நடந்து வரும் சோதனை..பன்னீர்செல்வத்தின் வீட்டில் ரூ.15 கோடி பறிமுதல்?

Mahendran
புதன், 28 பிப்ரவரி 2024 (19:45 IST)
முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவரும், முன்னாள் நகர்மன்ற தலைவர் பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 10 மணி நேரமாக நடந்து வரும் சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
முன்னதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை சோதனையை தொடங்கினர்.
 
கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை என தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது சோதனையின் முடிவில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவரும், முன்னாள் நகர்மன்ற தலைவர் பன்னீர்செல்வத்தின் வீட்டில் ரூ.15 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments